பைக் விபத்தில் வாலிபர் பலி

பலி;

Update: 2025-08-21 03:55 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் மகன் தவசி, 24; இவர் கடந்த 16ம் தேதி தனது பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்றார். அங்கு, சாலையோரம் நின்றிருந்த முத்துசாமி பைக் மீது, தவசி ஓட்டி சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த தவசி, முத்துசாமி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவசி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News