குளித்தலை அண்ணா சமுதாய திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்
குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம் குளித்தலை பேரறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தனர். இதில் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 21 ஆகிய 2 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த முகாமில் பட்டா மாற்றுதல், மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகரப் பொறியாளர் அணி கணேசன், நகர தொண்டரணி அமைப்பாளர் மது, நகர் மன்ற உறுப்பினர்கள் ஆனந்த லெட்சுமி, மஞ்சுளா, சாந்தி அண்ணாதுரை, சக்திவேல் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.