மனித குல விரோத கட்சியை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை து.ஜனாதபதியாக்க ஆதரிக்க முடியாது

பாரதிய ஜனதா கட்சி என்ற மனித குல விரோத கட்சியில் இருந்து கொண்டு தமிழராக இருக்கிறார் என்பதற்காக பிஜேபி சார்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க முடியாது - வேல்முருகன்;

Update: 2025-08-21 08:27 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வருகை புரிந்தார். மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ், வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும்போது, தமிழீழ மண்ணில் நமது தொப்புள்கொடி உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்த சிங்கள பேரின அரசின் இனப்படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் அதுபோல் உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும். அதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை இயற்றி 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதன் மூலம் ஐக்கிய நாடு சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீகாரில் நீக்கம் செய்யப்பட்ட 60 லட்சம் வாக்காளர்களில் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வட இந்தியர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ் மொழியின் கலாச்சாரம் தமிழ் மொழியின் தொன்மை பன்முகத்தன்மை அழியும். பாரதிய ஜனதா கட்சி என்ற மனித குல விரோத கட்சியில் இருந்து கொண்டு தமிழராக இருக்கிறார் என்பதற்காக பிஜேபி சார்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க முடியாது என்றார்.

Similar News