குருவுக்கு சிறப்பாக அபிஷேகம்

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது;

Update: 2025-08-21 17:38 GMT
பெரம்பலூர் சிவன் கோயிலில் குருவுக்கு சிறப்பாக அபிஷேகம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (21/08/25) ஆவணி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News