மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியில் பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் Legal-cum Probation Officer (LCPO), பணியிடத்திற்கு 01 வருடகால ஒப்பந்த அடிப்படையில், 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.;
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியில் பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மிஷன் வாட்சாலயா )Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) Protection Officer – (Non Institutional Care) 01 பணியிடமும் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் Legal-cum Probation Officer (LCPO) 01 பணியிடமும் தற்காலிக பணியிடங்களை நிரப்பிட கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) Protection Officer – (Non Institutional Care), பணியிடத்திற்கு 01 வருடகால ஒப்பந்த அடிப்படையில், 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலம் ஆகிய துறைகளில் திட்ட உருவாக்கம் /செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்த ஊதியமாக மாதத்திற்கு - ரூ.27,804 வழங்கப்படும். Post Graduate degree in Social Work/Sociology/ Child Development/Human Rights Public Administration/Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University (OR) Graduate in Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University with 2 years' experience in project formulation/ implementation, monitoring and supervision in the preferably in the field of Women & Child Development / Social Welfare. Proficiency in Computers. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் Legal-cum Probation Officer (LCPO), பணியிடத்திற்கு 01 வருடகால ஒப்பந்த அடிப்படையில், 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் துறையில் அரசு/ அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் சட்டப் பணி அனுபவம் வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய நல்ல புரிதலுடன் இருத்தல் வேண்டும். ஒப்பந்த ஊதியமாக மாதத்திற்கு - ரூ.27,804 வழங்கப்படும். LLB from recognized university. Experience of at least 2 years of working with Govt/ NGO Legal Matters preferably in the field of Women & Child Rights. Good understanding of Women & Child right & protection Issues. நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் பணியிடமானது “the selection is purely provisional and subject to the final outcome of the Writ Petition" எனும் நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேலும், இப்பணிடங்களுக்கான விண்ணப்பத்தினை https://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 05.09.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா ஹோட்டல் வளாகம் எண்.106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் – 621212. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு மிஷன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.