பச்சையம்மன் கோவில், ஆவணி மாத திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திமிதிமி விழா தொடங்கும் நேரத்தில் கோவில் பூசாரி பச்சமுத்து 54 என்பவர் நிலை தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார், இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்;
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில், ஆவணி மாத திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவில் உள்ளது பல்லாயிரம் குடும்பங்களுக்கு குடிப்பாட்டுக் கோவிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத திருத்தேர் திருவிழா நடத்துவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாத திருத்தேர் திருவிழா கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பூச்செறிதல் விழா மற்றும் 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பின் திருவீதி விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் இதில் பக்தர்கள் தனியாகவும் தங்கள் குழந்தைகளை கையில் சுமந்த வாரும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள், இத்திருவிழாவில் பொதுமக்கள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், திமிதிமி விழா தொடங்கும் நேரத்தில் கோவில் பூசாரி பச்சமுத்து 54 என்பவர் நிலை தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார், இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.