பாலகொலா, கல்லக்கொரை சாலையில் உலாவும் வனவிலங்குகள்... அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்.

அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்...;

Update: 2025-08-22 16:51 GMT
நீலகிரி பாலகொலா, கல்லக்கொரை சாலையில் உலாவும் வனவிலங்குகள்... அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்... நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்குகள் கிராமங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் உலாவுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீப தினங்களில் பாலகொலா கிராம பகுதிகளிலும் சாலைகளிலும் கரடிகள் உலாவுவது அதிகமாக உள்ளது. அதேபோல அருகாமையில் உள்ள சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது. அந்த வகையில் பாலகொலாவிலிருந்து கல்லக்கொரை செல்லும் சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது சாலையில் கரடி நடந்து செல்வதை அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் உள்ளூர் whatsapp குழுக்களில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்குகள் உலாவத் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு உடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக வனத்துறையின் எண்ணிற்கு அழைத்து தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்காகவும் தேயிலை தொழிலுக்காகவும் அதிகாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பயணிப்போர் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் தனித்தனியாக செல்லாமல் குழுவாக செல்லுமாறும் அறிவுறுத்துகின்றனர்.

Similar News