மதுரையில் நடைப்பெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்ற நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்

சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.;

Update: 2025-08-22 16:52 GMT
மதுரையில் நடைப்பெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்ற நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது....... தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சென்றுள்ளார். மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது அதிக வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏப்பட்டு மயங்கியுள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாநாட்டு திடலில் மருத்துவ குழு மூலம் முதலுதவி சிகிச்சையளித்தனர். பின்பு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் சமயநல்லூர் பகுதியில் மீண்டும் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். த வெகா மாநாட்டிற்கு சென்ற ரோஷன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் உயிரிழந்த ரோஷன் உடலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Similar News