எந்தவித அனுமதியும் பெறாமல் ராச்சத தங்கி சுவர் ஏற்றி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.........
சேலாஸ் சுங்கம் பகுதியில் அபாயகரமான இடத்தில் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ராச்சத தங்கி சுவர் ஏற்றி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.........;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் சுங்கம் பகுதியில் அபாயகரமான இடத்தில் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ராச்சத தங்கி சுவர் ஏற்றி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது......... நீலகிரி மாவட்டத்தில் தற்போது கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற பல கட்டுப்பாடுகள் உள்ளது பல இடங்கள் நிலச்சரிவு பகுதி என்பதால் மாவட்ட நிர்வாகம் கட்டிடங்கள் கட்ட முறையான அனுமதி வழங்க தாமதித்து வருகிறது. இந்நிலையில் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் சுங்கம் பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடத்தில் வணிக நோக்கத்துடன் கட்டிடம் கட்ட பள்ளத்தாக்கில் ராட்சத தாங்கும் சுவர் கட்டும் பணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பேரூராட்சியிலும் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தின் கீழ்புறம் காட்டேரி அணையில் இருந்து வெளி வரும் தண்ணீர் செல்லும் டனல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் சமயத்தில் கட்டிடம் பாரம் தாங்காமல் இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது வணிக நோக்கத்துடன் கட்டப்படும் இந்த கட்டிடத்தினால் மழைக்காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோல் ஆபத்தான இடங்களில் அனுமதி இன்றி கட்டும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.