மின்விளக்குகள் எரியவில்லை பொதுமக்கள் வேதனை

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு;

Update: 2025-08-24 15:44 GMT
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஓர் உயர் கோபுர மின் விளக்கு கம்பம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. கடந்த பல நாட்களாகலே இந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மாரியம்மன் கோவில் வளாகம் பகுதி இருள் சூழ்ந்து காணப்நடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் இதேபோல ஒரு சில இடங்களில் ஊராட்சி மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் எரியவில்லை எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Similar News