விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் மாவட்ட எஸ்பி

பிரச்சனைக்குரிய பகுதிகளில் பொதுமக்கள் அனைத்து எந்த பிரச்சனை வராத அளவிற்கு மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்;

Update: 2025-08-25 16:54 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வ.களத்தூர் கிராம பொதுமக்களிடையே அமைதிப் பேச்சுவார்தை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மங்களமேடு உட்கோட்டம் வ.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.களத்தூர் மற்றும் மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லப்பைக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் இருதரப்பினரும் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பொழுது காவல்துறை மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், லப்பைகுடிகாடு கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தப் பகுதியில் கூடுதலாக ஒரு ரோந்து காவலரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரின் இந்த உத்தரவை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர், மேலும் தங்கள் பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். வ.களத்தூர் கிராம முஸ்லீம் ஜமாத்தார்கள், இந்து முன்னனி நிர்வாகிகள் ஆகியோர்களிடையே கடந்த 22.08.2025-ம் தேதியும் லப்பைக்குடிக்காடு கிராம ஜமாத்தார்களிடம் 25.08.2025 -ம் தேதியும் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Similar News