சங்கரன்கோவில் எலுமிச்சம்பழம் விலை குறைவு: விவசாயிகள் கவலை

எலுமிச்சம்பழம் விலை குறைவு: விவசாயிகள் கவலை;

Update: 2025-08-26 06:44 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் இயங்கி வருகிறது தற்போது எலுமிச்சம் பழம் வரத்து அதிகரித்ததால் எலுமிச்சை விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 60ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சம் விலை குறைந்ததால் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News