மின்கம்பம் எரியவில்லை செய்தி எதிரொலி

செங்குணம் கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உயர் கோபுர மின்விளக்கு கம்பம் பல நாட்களாக எரியவில்லை என புகார் தெரிவித்து செய்தியை வெளியிட்டு இருந்த நிலையில் இன்று மின் கம்பத்தில் பணியாளர்கள் சரி செய்து மின் விளக்கை எரிய வைத்தனர்.;

Update: 2025-08-26 17:49 GMT
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஓர் உயர் கோபுர மின் விளக்கு கம்பம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. கடந்த பல நாட்களாகவே இந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மாரியம்மன் கோவில் வளாகம் பகுதி இருள் சூழ்ந்து காணப்நடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் இதேபோல ஒரு சில இடங்களில் ஊராட்சி மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் எரியவில்லை எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்த செய்தி கிங் செய்தியில் வெளியாகியிருந்தன. இதனிடையே இன்று செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக செயலாளர் கோவிந்தன் வழிகாட்டுதல்கள் படி இன்று கம்பங்களில் மின் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மின் விளக்குகளில் எரிந்தன. இது குறித்து செய்தி வெளியிட்ட கிங் செய்திக்கும் நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Similar News