முன்னே சென்ற பைக் மீது மோதி விழுந்த புதுமாப்பிள்ளை மீது எதிரே வந்த வேன் மோதி பலி

திருமணமாகி சுமார் 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2025-08-28 18:14 GMT
அரியலூர் மாவட்டம், தத்தனூர் அருகே உள்ள மேலக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தனவேல் மகன் அன்பரசன் (32). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் திருமணம் செய்து கொண்டார். இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் நடந்த திருமணத்திற்கு ராஜேஷ் என்பவருடன் பைக்கில் வந்திருந்தார். மீண்டும் இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேலக்கொட்டாய்க்கு பைக்கில் திரும்ப சென்றனர். பைக்கை அன்பரசன் ஓட்டியுள்ளார். மது அருந்தி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் சாலையில், அல்லிநகரம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்னே சென்ற குடும்பத்துடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த நொச்சிக்குளத்தை சேர்ந்த சிவா என்பவரின் பைக் மீது அன்பரசன் பின்புறத்தில் மோதிசாலை விழுந்து சரிந்து சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக பெரம்பலூர் நோக்கி வந்த வேனின் சக்கரத்தில் அன்பரசன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அன்பரசனின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்குஅனுப்பி வைத்தனர். இந்த விபத்தல் ராஜேஷ் மற்றும் சிவா குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். திருமணமாகி சுமார் 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News