தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 35 விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் வண்டிமலச்சி அம்மன் கோவில் முன்பாக கொண்டு வரப்பட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குண்டாற்றில் அணைக்கும் கரைப்பதற்காக ஊர்வலம் எடுத்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.