கோவையில் மிதமான மழை – போக்குவரத்து பாதிப்பு !
கோவையில் பல்வேறு பகுதிகளில் மழை – வாகன ஓட்டிகள் அவதி.;
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கோவையில் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்குப் பிறகு சாரல் மழை தொடங்கி, நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம், டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன், பீளமேடு, கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், சிறுமுகை ஆகிய இடங்களில் மழை பதிவாகியது. மாலையில் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது. பல இடங்களில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்படைந்தது. நகரம் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியது.