கோவையில் மூன்றாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு!
கோவையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.;
கோவையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்த நிலையில், வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் துறை மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். எனினும் எந்தவித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவும் வழக்கம்போல் புரளி என தெரியவந்தது. தொடர்ச்சியாக மிரட்டல் விடப்பட்டதால், சைபர் கிரைம் பிரிவு மற்றும் காவல் துறையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.