பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – ஜவுளி துறையினரின் நன்றி

அமெரிக்க வரி அதிர்ச்சிக்கு எதிராக பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – SIMA நன்றி.;

Update: 2025-08-29 06:18 GMT
அமெரிக்கா இந்திய ஜவுளி பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், மத்திய அரசு பருத்திக்கான 11% இறக்குமதி வரி விலக்கு காலத்தை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதற்காக கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சங்க தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், துணைத்தலைவர் ரவிசாம், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நடவடிக்கை அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஜவுளி துறைக்கு ஊக்கமாக இருக்கும் என்றாலும், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படலாம் என சங்கம் கவலை தெரிவித்தது. மேலும், வங்கிக் கடன் கால நீட்டிப்பு, வட்டி விகித சலுகை போன்ற ஆதரவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினர். சந்திப்பில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்த நடவடிக்கை ஜவுளி துறைக்கு நிவாரணமாகவும், பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பில்லாததாகவும் இருக்கும் என தெரிவித்தார். மேலும், அமெரிக்க வரி பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், புதிய ஏற்றுமதி சந்தைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Similar News