கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக இருப்பவர் முத்துராமன். இவர் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மகன் சந்துரு (26). விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரபு, பார்த்திபன், அரவிந்த், பிரகாஷ் ஆகியோர் வீட்டின் முன் அத்துமீறி நுழைந்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. மேற்கண்ட 5 பேர் மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.