குமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனிராஜ் (59). இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கொல்கத்தா, கத்திப் மாவட்டத்தை சேர்ந்த ஜோய்சன் (24). என்பவர் உட்பட 12 வடநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்கடந்த 25ஆம் தேதி முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 27ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று மற்றும் பேரலைகளால் விசைப்படகு தத்தளித்துள்ளது. இந்த நிலையில் கடலில் போடப்பட்டிருந்த வலையை ஜோய்சன் இழுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி ஜோய்சன் கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தவர்கள் உதவியுடன் ஜோய்சனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 3 நாட்களாக தேடியும் அவர் கிடைக்காதால் சக மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பினார். இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலில் மாயமான ஜோய்சனுக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்களே ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.