இரணியல்: பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரி;

Update: 2025-08-29 15:20 GMT
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரைட் (53). இவர் தனது மனைவி ஜோஸ் சுதா (52) என்பருடன் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினர். சுங்கான்கடை பகுதியில் செல்லும் போது பின்னால் வந்த டெம்போ எதிர்பாராதமாக பிரைட்டின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்ததில் மனைவி ஜோசுதாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதனை டாக்டர்கள் ஜோஸ் சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News