குலசேகரம் :  முந்திரி ஆலையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

கன்னியாகுமரி;

Update: 2025-08-29 15:29 GMT
குமரி மாவட்டம்  குலசேகரம் பகுதியில் தனியார் முந்திரி ஆலை ஒன்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. தற்போது 8 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆலையில் பணிபுரிந்து வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம், போனஸ், பணிக்கொடை போன்றவை முழுமையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முந்திரி ஆலை முன் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு  ஆதரவாக திற்பரப்பு பேரூராட்சி கவுன்சிலர் சதீஷ், மாவட்ட பி எம் எஸ் முந்திரி தொழிலாளர் சங்கத் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலை நிர்வாகம் தரப்பில் யாரும் அங்கு வராததால் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Similar News