திருநங்கையை கொன்ற இளைஞருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை !

கோவை திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நீதிமன்றம் கடும் தீர்ப்பு.;

Update: 2025-08-30 01:39 GMT
கோவை சாய் பாபா காலனியில் வசித்த திருநங்கை சங்கீதாவை 2020 அக்டோபர் 21 அன்று கொலை செய்த வழக்கில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷுக்கு கோவை எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. ராஜேஷ், சங்கீதாவை கத்தியால் குத்திக் கொன்று உடலை டிரமில் அடைத்து தப்பிச் சென்றிருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். நீதிபதி விவேகானந்தன் வழங்கிய தீர்ப்பில், ஆயுள் தண்டனைக்கு இணையாக 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என கூறப்பட்டது.

Similar News