கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !

முருகதாஸ் இயக்கிய மதராஸி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.;

Update: 2025-08-30 02:32 GMT
கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய “மதராஸி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், “கல்லூரி நாட்களில் கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இன்று இந்த உயர்வை அடைந்துள்ளேன். இன்னும் அந்த நண்பர்களோடு இணைந்தே பயணித்து வருகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசியார். அவர் மேலும், 3 வருடங்களுக்கு பிறகு அனிருத் இசையமைப்பில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “மதராஸி” படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் பாடலுக்கு, விழா நேரத்தில் கல்லூரி மாணவர்களுடன் சிவகார்த்திகேயன் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Similar News