நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கீரிப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் உரிமையாளருக்கு சொந்தமான மினி டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் நாகர்கோவிலிருந்து மினி டெம்போ வை எடுத்து கொண்டு கீரிப்பாறை நோக்கி செல்லும் போது தெரிசனங் கோப்பு பழையாற்று பாலம் அருகே வரும் போது மினி டெம்போ ஆற்றுக்குள் பாய்ந்தது. பழையாற்றில் வரும்மழை வெள்ளத்தில் மினி டெம்போ மிதந்து சென்றது. டிரைவருக்கு நீச்சல் தெரிந்ததால் எப்படியோ கதவை திறந்து வெளியே வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ளவர்களின் உதவியுடன் அந்த வாகனம் மேலும் ஆற்று நீரில் இழுத்து செல்லாதவாறு கயிறு போட்டு கட்டி, பின்பு மீட்பு வாகனத்தை வர வைத்து அதன் உதவியுடன் மினி டெம்போ வை மீட்டனர். எப்படியோ டிரைவர் காயங்களின்றி உயிர் தப்பினார்.