ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் சொந்தமான 40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் மான் தண்ணீர் தேடி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது. இதை கண்ட விவசாயி ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்புத்துறையினர் கிணத்தில் தவறி விழுந்த மானை மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.