வள்ளவிளையில் பெண்கள் எழுச்சி கருத்தரங்கம்

கன்னியாகுமரி;

Update: 2025-08-30 08:39 GMT
குமரி மாவட்டம் வள்ளவிளை கிராமத்தை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற இந்திய சாதாரண மக்களின் உச்சம் (சீயோன்) என்ற அமைப்பின் 6-வது ஆண்டு நிறைவு விழா கிராமப்புற பெண்களின் ஒரு எழுச்சி மாநாடாக நடைபெற்றது. சுமார் 300 பெண்கள் கலந்து கொண்ட இந்த எழுச்சி கருத்தரங்கில் முதியோர்கள் மற்றும் விதவை பெண்மணிகளுக்கு உணவு பொருள்களும் விநியோகிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு சியோன் டிரஸ்ட் தலைவர் கேத்தரின் பேபி தலைமை வகித்தார். கொல்லங்கோடு நகராட்சி கவுன்சிலர் விஜயமோகனன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார். தொழிலதிபரும்  திரைப்பட தயாரிப்பாளருமான  பசிலின் நஸ்ரியான் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார், இதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் புறா அமைப்பின் நிர்வாகியுமான ஜான்சி சிறப்புரையாற்றினார்.

Similar News