கோவை விமான நிலையத்தில் சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு !
17 நாள் மோட்டார் சைக்கிள் யாத்திரை முடித்து சத்குரு கோவையில் வந்தார்.;
இரண்டு மூளை அறுவை சிகிச்சைக்கு பின் முதன்முறையாக 17 நாள் மோட்டார் சைக்கிள் பயணமாக கைலாய யாத்திரையை முடித்து ஈஷா யோகா நிறுவனர் சத்குரு நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி, ஆன்மீக பாடல்களுடன் வரவேற்றனர். பின்னர் சத்குரு இருசக்கர வாகனத்தில் ஈஷா யோகா மையம் சென்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாவின் சக்தியால் தான் மருத்துவர்கள் தடை செய்திருந்தும் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக கூறினார். அமெரிக்க வரிவிதிப்பு நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், அது முன்னேற்றத்திற்கான சவாலாக கருதப்பட வேண்டும் என்றார். நடிகர்கள் அரசியலில் வருவது மக்களின் விருப்பத்தை பொறுத்தது என்றும், 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் ஈஷா கிராமோத்சவம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்த சத்குரு, புத்தி கூர்மையுடன் இருந்தால் எந்த தடையும் தாண்டி செல்ல முடியும் என்றார்.