கோவை அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை !
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.;
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை சேர்ந்த தர்மராஜ் (45), கடந்த ஆண்டு மது போதையில் மனைவி உமா (39)-வை அடித்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை மகிளா நீதிமன்றம், தர்மராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்தது. இவ்வழக்கில் புலனாய்வை சிறப்பாக நடத்திய புலனாய்வுத் அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.