விநாயகர் சதுர்த்தி விழா கன்னியாகுமரி மாவட்ட சிவசேனா சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 80 விநாயகர் சிலைகளும், 1008 வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் பூஜைக்கு வைக்கப்பட்டது . தினசரி பூஜைகள் முடித்து அளப்பன்கோடு கோயிலில் இருந்து இன்று சனிக்கிழமை மதியம் ஊர்வலம் துவங்கியது. மேல்புறம், வட்ட விளை, கழுவன்திட்டை, குழித்துறை ஜங்ஷன், வெட்டுவெந்நி வழியாக குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடல் வந்தடைந்தது. விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.