நலம் காக்கும் ஸ்டாலின் பரிசோதனை முகாம்

மைலாடி;

Update: 2025-08-30 14:59 GMT
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாரம் மைலாடி எஸ்.எம்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்று (30.08.2025) நலம் காக்கும் ஸ்டாலின் - முழுஉடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்தத் முகாமை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் மேலும் இந்த முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். மகப்பேறு மருத்துவம், இருதய மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், எழும்பு முறிவு சம்பந்தமான மருத்துவம்  உட்பட பல்வேறு மருத்துவ சிகிட்சைகள்  நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News