குமரி மாவட்டம் பாகோடு பேரை காலனி சேர்ந்தவர் நிஷாந்த்( 27 ). அலுமினியம் பேப்பரிகேஷன் தொழிலாளி. இவர் நேற்று இரவு ஞாறான்விளை பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிபின்( 37) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து இருசக்கர வாகனத்தை ரைஸ் செய்து முகத்தில் லைட் அடித்துள்ளார். இதனை நிஷாந்த் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட பிபின் அவரை கம்பால் தாக்கி காயப்படுத்தி உள்ளார். இதை அடுத்து படுகாயம் அடைந்த நிஷாந்த் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பிபின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.