மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி கார் சேதம்

மார்த்தாண்டம்;

Update: 2025-08-30 15:11 GMT
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் ராயல் லென்ஸ்(49). இவர் காரில் மார்த்தாண்டம் சப் -ரோட்டில் இருந்து மேம்பாலத்தின் மேற்பகுதியில் இன்று சென்றுள்ளார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில்சென்று கொண்டிருந்த கனிம வள லாரி அதிவேகமாக சென்று மோதியதில் ராயல் லென்ஸ் ஓட்டிச் சென்ற கார் சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமுமம் ஏற்படவில்லை. இது குறித்து ராயல் லென்ஸ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன்னியூர் பகுதியை சேர்ந்த டாரஸ் லாரி ஓட்டுநர் ஜாண் கிறிஸ்டோபர்( 47 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News