நகர்ப்புற பசுமையாக்கம் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக விழிப்புணர்வு ஊர்வலம் குமரி மாவட்டம், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு வரை இன்று காலை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மணிமேடையை சுற்றி மரச்செடிகள், பூச்செடிகள், மற்றும் அழகான புற்கள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர்கள் முத்துராமன், மற்றும் மாநகர அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.