ஆப்பிள் கொடுத்து மாவட்ட ஆட்சியரை வரவேற்க அரசு அதிகாரிகள்
புதியதாக பதவி ஏற்ற ஆட்சியருக்கு உற்சாக வரவேற்பு;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்றுக் கொண்டார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ச.அருண்ராஜ் சர்க்கரைதுறை கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக பணிபுரிந்த ச. மிருணாளினி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ச.மிருணாளினி பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட ஆட்சியர் பணி புரியும் அரசு அலுவலர்கள் ஆப்பிள் பழம் கொடுத்து ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்