குமரி மாவட்டம் வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (43) ரேஷன் கடையில் பணிபுரிகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜு (58) என்பவருக்கு முன் விரோதம் உள்ளது. நேற்று அனில் குமார் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ராஜு மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் சேர்ந்து அனில் குமாரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். களியக்காவிளை போலீசார் ராஜு உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.