கன்னியாகுமரியில் பெண் மீது தாக்குதல்

வழக்கு பதிவு;

Update: 2025-08-31 04:02 GMT
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜாமணி மனைவி சரோஜா (57). சின்ன முட்டம் பகுதியை சேர்ந்தவர் அமல் தாஸ் மனைவி ராணி. இவர்கள் உட்பட சிலர் சுய உதவி குழுவில் இருந்து வருகின்றனர். இவர்கள் வங்கி கடன் உதவி பெற்றுள்ளனர்.  இதில் ஒரு உறுப்பினர் கடனை சரிவர திருப்பி செலுத்தாததால் அனைவரின் வங்கி கணக்கு முடங்கியுள்ளது. இதனால்  நேற்று அமல்தாஸ் சரோஜா வீட்டிற்கு வந்து தனது மனைவியின் வங்கி கணக்கை ஏன் முடக்கி வைத்தீர்கள் என கேட்டு தகராறு செய்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். கன்னியாகுமரி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News