குமரி மாவட்டம் பூட்டேற்றி, ஒளிபாறை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (47). கொத்தனார் வேலை செய்து வந்தார். சம்பவ தினம் இவர் வேலைக்கு சென்றுவிட்டு, கீழ் குளம்பிடாகை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த பாரக்கான் விளையை சேர்ந்த அபிஷ் (21) என்பவர் ராஜகுமார் மீது பைக்கால் மோதினார். அக்கம் பக்கத்தினர் ராஜகுமாரை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜகுமார் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர் மனைவி கிரிஜா (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.