டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை
திருச்செந்தூரில் மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருச்செந்தூரில் மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,"திருச்செந்தூர், குலசை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதன் அருகே குழந்தைகள் நல மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபர்களால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. சமீப காலமாக சாதி பிரச்சனையாக மாறும் அளவுக்கு எல்லை மீறி போகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிககை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.