அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் புகைப்படம் வைக்க கோரி ஆர்ப்பாட்டம் !

பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-09-02 07:59 GMT
தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு வெளியிட்ட அரசாணையை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய இயக்கத்தினர், புகைப்படங்களுடன் உள்ளே செல்ல முயன்றபோது காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத் தலைவர் ஈஸ்வரன், “அரசு அலுவலகங்களில் புகைப்படங்களை வைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் இயக்கம் சார்பாகவே அதை செய்வோம்” என்று எச்சரித்தார்.

Similar News