காரில் பைக் மோதி வாலிபர் பலி

கருங்கல்;

Update: 2025-09-02 16:02 GMT
குமரி மாவட்டம்  கருங்கல் அருகே விழுந்தயம் பலம் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் மகன் விஜிஸ் ( 24). தூத்துக்குடியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் நேற்று முன்தினம் இரவு அவர நண்பனுக்கு மருந்து வாங்க பைக்கில்  சென்று விட்டு கருங்கல் பகுதியில் செல்லும் போது, சாலையோரம் நிறுத்தியிருந்த காரின் பைக்கில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜிஸ் உயிரிழந்தார். கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News