குமரி : இலவச சட்ட ஆலோசனை மையம்

இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு;

Update: 2025-09-02 16:06 GMT
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ பணியாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவி ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க 'நல்சா வீர் பரிவார் சகாயத யோஜனா ' என்ற புது தேசிய சட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட உதவி மையத் திறப்பு விழா நாளை (புதன்கிழமை) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள முன்னாள் படை வீரர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. குமரி  மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னாள் படை வீரர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Similar News