குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்துறை அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பேரிடர் குறித்த விழிப்புணர்வு முகம் நடத்த கொல்லங்கோடு பி கிராம நிர்வாக அலுவலர் அருண், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், முஞ்சிறை வட்டார கல்வி அலுவலர் அபிஷா மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட சென்றனர். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் இந்த கட்டிடத்தில் முகம் நடத்த முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து வருவாய் துறையினர் ஏமாற்றுடன் திரும்பி சென்றனர். வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தில் முகாம் நடத்த இடம் இருந்த போதிலும் பள்ளியில் பள்ளியில் நடத்த வந்ததாக புகார் எழுந்தது.