குமரி மாவட்டம் தக்கலை, பாரதிநகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் துணை சர்வேராக உள்ளார். இவருக்கு ரூபஸ் இஸ்ரேல் தாமஸ் (30), சென்னையை சேர்ந்த விஜய் (50) ஆகியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வேல்முருகன் மகளுக்கு வங்கி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 12 லட்சத்து 85 ஆயிரம் வாங்கியுள்ளனர். ஒரு வருடமாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதை அடுத்து வேல்முருகன் மனைவி காளீஸ்வரி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.