குமரி : வருவாய்த் துறை வேலை நிறுத்தம்

நாளை முதல் 48 மணி நேரம்;

Update: 2025-09-02 16:28 GMT
வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்திட வேண்டும், போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் செப்டம்பர் 3ம் (நாளை ) தேதி மற்றும் 4ம் தேதி 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால் குமரியில் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News