கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் அந்தோணி மீனவர். இவர் கடந்த தினம் உயிரிழந்தார். இதனால் இவரது வீட்டை திறந்து வைத்துவிட்டு உறவினர்கள் தூங்கினர். இந்த நிலையில் சம்பவ தினம் அந்தோணியின் மகனான சிறுமி கழுத்தில் கிடந்த 3 பவன் தங்க நகையை மர்ம நபர் யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த ரக்சன் என்பவர் திருடியது தெரிய வந்தது. போலீசார் ரெக்சனை கைது செய்து இன்று காலை சிறையில் அடைத்தனர்.