தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய பாறை மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் இருந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.