கோவை: கல்வி நிதிக்காக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
மத்திய அரசை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.;
மத்திய அரசு SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி வழங்கப்படாததை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், கோவை நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வழக்கறிஞர்கள் பங்கேற்று, மத்திய அரசு உடனடியாக கல்வி நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.