விஜய்யை மக்கள் நடிகராகவே பார்க்கிறார்கள் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்லக்குமார் !
தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெறுவதாக செல்லக்குமார் விளக்கம்.;
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். வரவிருக்கும் திருநெல்வேலி மாநாடு தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து நடைபெறும் முக்கிய கூட்டமாக இருக்கும் என்றும், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்காளர்களைத் திசை திருப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். மோடி அரசின் வெளிநாட்டு கொள்கை தோல்வியால் பின்னலாடைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா விதித்த வரி குஜராத் எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் பலன் அளிக்கிறது என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கருத்தை எதிர்த்து அவர் தனது கட்சியை முதலில் பா.ஜ.க.விலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சாடினார். கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை டெல்லி காங்கிரஸ் கமிட்டி மட்டுமே எடுக்கும் என்றும் விளக்கினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை மக்கள் தற்போது வரை நடிகராகவே பார்க்கிறார்கள் எனவும் செல்லக்குமார் தெரிவித்தார்.