கோவை: எடப்பாடி பழனிசாமி கோவை வருகை - அதிமுக ஆலோசனை கூட்டம் !
எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு சூலூரில் அதிமுக செயல்வீரர்கள் உற்சாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருகூர் பேரூராட்சி மற்றும் கலங்கள் ஊராட்சியி பகுதிகளுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். அவரை சிறப்பாக வரவேற்கும் வகையில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையேற்றார். இக்கூட்டத்தில் கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தோப்பு கா.அசோகன், சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல் (MSW), சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.